25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீர்

முடி உதிர்தல், வறண்ட சருமம், வளர்ச்சிதை மாற்றம், கருவறுதல், சுழற்சி மற்றும் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் TSH, T3, T4 போன்ற தைராய்டு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீரை  பற்றிய தகவல்களை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்

தண்ணீர் - 1 கிளாஸ்

தனியா – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை 9-12

உலர்ந்த ரோஜா இதழ்கள் - 1 டீஸ்பூன்

செய்முறை

தனியா, கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா

இதழ்களை தண்ணீரில் சேர்த்து 5-7 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
 

மற்றொரு முறை
 

ஒரு டீஸ்பூன் தனியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இதை பாதி அளவு வற்றும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். இந்த அருமையான பானம் உங்கள் மனநிலை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.

நன்மைகள்

தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும்

தைராய்டு ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சரும வறட்சி குறையும் முடி உதிர்வை தடுக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News