பணம் பத்தா இருக்கணும், பொண்ணு முத்தா இருக்கணும், முறையும் அத்தை மகளா இருக்கணும்.
நிச்சயதார்த்தம் என்பதை பரிசம் போடுதல் எனக் கூறலாம். அதாவது 'பரிசு கொடுத்தல்' என்பதுதான் மருவிப் பரிசம் என்றாகிவிட்டது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். நிச்சயதார்த்தத்திற்கும் பரிசு கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?
அந்தக் காலத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவேண்டுமானால், ஆண்மகன் தன் சம்பாத்தியத்தில் பொருள் சேர்த்து ஒரு பெரிய தொகையைப் பெண் வீட்டார்க்கு கொடுக்கவேண்டுமாம். தனக்கு மனைவியாகத் தன் வீட்டிற்கு வரப்போகிறவளை பேணி வளர்த்த குடும்பத்திற்காக ஒரு ஆண் கொடுக்கும் பரிசுதான் அந்தத் தொகை. அப்படி பரிசு கொடுக்க நம்மிடம் நிறைய பணம் இருக்க வேண்டும். ஏனெனில், பெண்ணின் அழகு மற்றும் குடும்ப சூழ்நிலை பொறுத்து அந்தத் தொகை அதிகரிக்கும். அதனால்தான் பணம் பத்தா இருக்கணும்.
பின் பெண் முத்துபோல அழகாக மற்றும் நல்ல குணங்களை கொண்டவளாக இருக்கணும். முறை அத்தைமகளாக இருந்தால் பணம்கூடக் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை.
0
Leave a Reply