அரேபிய பாலை வனம் உலகின் நான்காவது பெரியது
அரேபியாவில்தற்போதைய பாலை வன பகுதிகள். இதற்கு முன் ஆறு, ஏரி உட்பட பசுமை பகுதியாக இருந்தன என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.அரேபிய தீபகற்பம் பெரும்பாலும் வெப்ப மயமானதாகவும், பாலைவன மணல் பரப்பை கொண்டதாகவும் உள்ளது. அரேபிய பாலை வனம்23.30 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இது உலகின் நான்காவது பெரியது. இந்நிலையில் 'இப்பகுதிகள் ஒரு காலத்தில்(9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) பசுமை பகுதியாக இருந்தன.
இங்கு மழைப்பொழிவு அதிகம் இருந்ததால், ஆறு, ஏரி உட்பட பல நீர்த்தேக்க பகுதிகளாக இருந்தன. இந்த மழைப் பொழிவுக்கு ஆப்ரிக்க பருவமழை காலம் காரணமாக இருந்தது. இப்பகுதி செங்கடலை ஒட்டிய ஆசிர் மலைகளிலிருந்து1100 கி.மீ தூரம் வரை இருந்துள்ளது. பின்5000 ஆண்டுக்கு முன்பிலிருந்து மழைப் பொழிவு வெகுவாக குறைய தொடங்கி வறண்ட நிலைமை உருவாகியிருக்கலாம்' என ஆய்வு தெரிவித்துள்ளது.
0
Leave a Reply