அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய்,பழுதான ஷட்டர்களால் வீணாக வெளியேறும் நீர்
.அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய்,இராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலை அருகே 150 ஏக்கரில் அமைந்துள்ளது. அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய், அய்யனார்கோவில் ஆறு, சேத்தூர் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் ஆற்று நீரை பிரதானமாக கொண்டு மாவட்டத்தில் இரண்டாவது பெரிய கண்மாயாக இருந்து வருகிறது. நீர் நிரம்பியதும், ஐமீன் கொல்லங்கொண்டான், நக்கனேரி, சிரம்பராபுரம் வரை அடுத்தடுத்த கண்மாய்களுக்கும் நீர் தேங்குவதன் மூலம் 300 ஏக்கர் நேரடியாகவும் , ஆயிரகணக்கான ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர பல்வேறு கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கண்மாயின் பிரதான ஷட்டர்கள் சேதம் அடைந்துபல ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்காததால் தண்ணீர் வீணாகிறது. நிரந்தர தீர்வாக தண்ணீர் வற்றும் காலங்களில் இருந்தே ஷட்டர்களை தரமாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply