கலெக்டர் சுக புத்ரா செய்திக்குறிப்பு -நீச்சல் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு.
ஏப். 1 முதல் ஜூன் 14 வரையிலான விடுமுறைக் காலத்தில் நீந்தக் கற்றுக்கொள்' பயிற்சி வகுப்பு மாவட்டவிளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடத்தப்பட உள்ளது.
நீச்சல் கற்றல் பயிற்சிக்கான காலை நேர வகுப்புகள் காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலும், காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும், காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் மாலை நேர வகுப்புகள் மதியம் 3:30 மணி முதல் 4:30 வரையிலும், மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடக்க உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.1770. சேர விரும்புவார்கால அட்டவணை படி பங்கேற்கலாம். விவரங்களுக்கு 9751393412 என்ற அலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம், என்றார்.
0
Leave a Reply