ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 11வது சீசன் ,இந்திய பெண்கள் வெற்றி .
பெண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் , 'சி' பிரிவு லீக் சுற்றில் நமீபியா, அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா, ஜெர்மனியிடம் தோல்வி யடைந்து 2வது இடம் பிடித்தது.
9-16வது இடத்துக்கான நேற்றுநடந்த போட்டியில் இந்தியா, வேல்ஸ் அணிகள் மோதி, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஹினா பானோ (14வது நிமிடம்), சுனேலிதா (24வது), இஷிகா (31வது) தலா ஒரு கோல்அடித் தனர். வேல்ஸ் அணிக்கு எலோயிஸ் (52வது நிமிடம் ) ஆறுதல் தந்தார்.வரும் டிச. 10ல் நடக்கவுள்ள 9-12வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி உருகுவே அணியை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply