25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சீரகத் தண்ணீர் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சீரகத் தண்ணீர் .

செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சீரகத் தண்ணீரைக் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு, செரிமானம் எளிதில் நடைபெறும். அதுமட்டுமல்லாமல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவையும் எளிதில் குணமாகும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.

அதிக இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள், சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால், அதிலுள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து, வெறும் வயிற்றில் இந்த நீரைக் குடித்து வர இரத்த அழுத்தம் சீராகும்.சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News