பேரீச்சம் பழ அல்வா.
தேவையான பொருட்கள்:
விதை நீக்கியபேரீச்சம் பழம்- 300 கிராம்
இஞ்சி- 100 _)கிராம்
சர்க்கரை- 250 கிராம்
முந்திரி- 50 கிராம்
ஏலக்காய்- 5
நெய்- 50 கிராம்
தண்ணீர்-தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி சீவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நைசாக
அரைத்து சாறு எடுக்கவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, பேரீச்சம் பழங்களை
சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு, அரை மணி நேரம் ஊற விடவும். ஊறிய பிறகு
அந்த கலவையை, மறுபடியும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் .
வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து, கலவையில் சர்க்கரை சேர்த்து மிதமான
சூட்டில் கிளறவும். முக்கால் பதத்தில் இருக்கும் போது பொடித்த ஏலக்காய்,
முந்திரி,நெய் சேர்த்து கிளறவும். கலவை, அல்வா பதத்திற்கு வந்ததும், தட்டில் கொட்டி
ஆறவிடவும். சுவையான, 'பேரீச்சம்பழ அல்வா' தயார்.
0
Leave a Reply