வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் (19.02.2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 வரைவு வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர் குறியீடு உள்ள வாக்காளர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர்பணியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026ல் படிவம்- 6, 7, 8 ஆகியவற்றை, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் (TN Rights) மூலம் கள ஆய்வு செய்து எடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும், அவர்களை அடையாளப்படுத்தி வாக்குச்சாவடியில் தேவையான அணுகல் வசதிகள் ஏற்பாடு செய்யவும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர் குறியீடு உள்ள வாக்காளர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ உதவி ஆணையர் கலால் திரு.ரமேஷ், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.பாலமுருகன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply