25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கான மத்திய அரசின் ‘ஜீவன் ரக்ஷா தொடர் விருது-2025” பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கான மத்திய அரசின் ‘ஜீவன் ரக்ஷா தொடர் விருது-2025” பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 2025 -ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கான மத்திய அரசின்  ‘ஜீவன் ரக்ஷா தொடர் விருது  2025”  வழங்கப்பட உள்ளது. கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்றி தகுதியுடைய நபர்கள் 25.07.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தகுதிகள் :
ஜீவன் ரக்ஷா தொடர் விருது : இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (01.10.2023 ஆம் தேதிக்கு பிறகு) ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் மூன்று பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. வயது வரம்பின்றி இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
 

1. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

2. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

3. ஜீவன் ரக்ஷா பதக்கம் - தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரை காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

மேலும் தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட  ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். அலைபேசி எண்.04562-252701 என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News