திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு .
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, திருவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம், சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 8 ஆவது கட்டமாக நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை, நேரில் சென்று பயனாளிகளின் விவரங்கள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமைத் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரும் நாற்றங்கால் நர்சரி பூங்காவினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் மாவட்ட (ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply