25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

தாய்நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின்  மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின் போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், முன்னாள் படைவீரரின் திருமணமாகாத மகள் ,விதவை மகள்கள் ,ஆகியோர் தகுதியானவர்கள்.

     இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டிமானியமும் வழங்கப்படும். மேலும் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக  ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.

இத்திட்டத்திற்கான முக்கியமான தகுதிகள்:

01. முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்ச வயது 55.
02. மணமாகாத மகள்கள் மற்றும் கணவனை இழந்த மகள்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்த பட்ச
        வயது வரம்பு 21 அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும்.
03. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
04. விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை.
05. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை.

       எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் அவர்களைச் சார்ந்தவர் மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி  எண்ணிலோ (04563-296382) தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News