25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


பூலோக சொர்க்கம்; VALLEY OF FLOWERS “பூக்களின் பள்ளத்தாக்கு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூலோக சொர்க்கம்; VALLEY OF FLOWERS “பூக்களின் பள்ளத்தாக்கு

ந்த கோடை வெயிலுக்கு அருவி, தீவு, கடற்கரை என்று சென்றது உத்திரகாண்ட்டில் சமோலி மாவட்டத்தில் உள்ளது இந்த பூக்களின் பள்ளத்தாக்கு. இங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக பல நிற வண்ணங்களில் மலர்கள் அழகாக காட்சியளிக்கிறது. இது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் போன தேசிய பூங்காவாகும். இந்த பள்ளத்தாக்கு கடற்மட்டத்திலிருந்து3352 முதல்3658 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வருடாவருடம் இங்கே நிறைய சுற்றுலாப்பயணிகளும், மலையேற்றம் செய்பவர்களும் வருகை தருகிறார்கள் .இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இங்கு600 வகையான பூக்கள் பூக்கும் செடிகளும், பூக்கள் பூக்காத செடிகளும் மேலும் மருத்துவ குணம் கொண்ட அரியவகை செடிகளும் உள்ளது. இந்த பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை1982ல் உருவாக்கினார்கள்.

இங்கே மலையேற்றம் செய்வது சற்று கடினமானது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் பூக்களின் அழகை காணும் போது எல்லா கஷ்டங்களும் பறந்து விடும் என்கின்றனர் சுற்றுலாப்பயணிகள். இங்கே ஆர்சிட், பாப்பிஸ்,மாரி கோல்ட், டெய்ஸி போன்ற கண்களுக்கு அழகான பூக்களும் உள்ளது. இங்கே மலையேற்றம் செய்ய சரியான நேரம், ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களாகும். கோவிந்த்காட்-காங்கிரியா- பூக்களின் பள்ளத்தாக்கு இதுவே இங்கு செல்வதற்கு சுலபமான மலையேற்ற பாதையாக கருதப்படுகிறது. இங்கே செல்ல ஒருவருக்கு ரூபாய்150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.1931 ஆம் ஆண்டு மூன்று பிரிட்டிஸ் மலையேற்றம் செய்பவர்கள் காமெட் மலையை வெற்றிகரமாக ஏறிவிட்டு திரும்பும் போது வழித்தவறி இந்த பள்ளத்தாக்கை வந்தடைந்தனர். இந்த பள்ளத்தாக்கின் அழகை பார்த்துவிட்டு அவர்களே‘பூக்களின் பள்ளத்தாக்கு’ என்று இவ்விடத்திற்கு பெயர் வைத்தனர். அந்த மூவரில் ஒருவரான ஸ்மித்‘பூக்களின் பள்ளத்தாக்கு’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

உலகம் முழுவதிலிருந்தும் மலையேற்றம் செய்பவர்களும், சுற்றுலாப்பயணிகளும் இங்கே வந்தவண்ணம் உள்ளனர். இயற்கை அழகு, மலையேற்றம் செய்வது, அரியவகை பூக்கள், புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடம், இமாலயத்தின் அழகு போன்றவை சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்க்கிறது என்றே சொல்லலாம்.ஒவ்வொரு15 நாட்களும் இந்த பள்ளத்தாக்கில் உள்ள பூக்கள் நிறம் மாறும். இங்கு பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளின் அழகை ரசிக்கலாம். பனி சூழ்ந்த மலைகளைக் கண்டு களிக்கலாம். இங்கு வருவதற்கு முன் வானிலை, காலநிலை மாற்றங்களை பற்றி தெரிந்து கொண்டு வருவது சிறந்ததாகும்.பூலோகத்தின் சொர்க்கம் என்று சுற்றுலாப்பயணிகளால் அழைக்கப்படும் . \”.VALLEYOFFLOWERS“பூக்களின் பள்ளத்தாக்கை . வாழ்வில் ஒருமுறையாவது இவ்விடத்திற்கு சென்று வருவது சிறந்தது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News