அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (23.06.2025) நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் தலைசிறந்த கல்லூரிகளில் உள்ள வாய்ப்புகள், அதனை அடைவதற்கான வழிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.
இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் உடைய நோக்கம் நாம் பள்ளிகளில் பயிலும் போது, பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லாம் நன்றாக படிக்க வேண்டும். நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களை எடுத்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று சொல்வார்கள். அதோடு சொல்லப்படாத ஒரு நுணுக்கமான, முக்கியமான, நடைமுறைக்கு மிகவும் ஒத்து வரக்கூடிய ஒரு செய்தியை நாம் வலியுறுத்துவது இல்லை. அது என்னவென்றால் நமக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்த ஒரு விழிப்புணர்வு.மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, கட் ஆப் மதிப்பெண்கள், உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப உயர்கல்வியில் உள்ள சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயிலவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.அதைவிட மிக முக்கியம் பல்வேறு இட ஒதுக்கீட்டில் வரக்கூடியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர்கள் வகுப்பைச் சார்ந்த பிரிவினர் ஆகிய மூன்று பிரிவினர்கள் இந்திய அளவில் இருக்கக்கூடிய உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான விண்ணப்பங்கள் மிக குறைவாக வருகிறது.
விண்ணப்பம் அளித்து குறைந்த அளவு முயற்சி செய்தாலே, இந்தியாவினுடைய தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் பயிலவதற்கான வாய்ப்பை பெற முடியும்.
மிகப்பெரிய வாய்ப்புகள் உங்கள் கைகளில் இருக்கிறது. அந்த வாய்ப்புகள் என்பது பள்ளி படிப்பு மட்டுமல்ல, அதைத் தாண்டி உங்களுக்கு இருக்கக்கூடிய எதிர்கால வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வும் புரிதலும் இல்லை என்றால் நிறைய வாய்ப்புகளை நீங்கள் தவற விடுகிறார்கள் என்று அர்த்தம்.நீங்கள் இருப்பது என்பது வாய்ப்புகள் நிறைந்த ஒரு சுரங்கம். அந்த சுரங்கத்தில் யார் ஆழமாகவும், அகலமாகவும் சென்று தோண்டுகிறார்களோ, அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.இந்திய அளவில் இருக்கக்கூடிய தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகள் உங்களைப் போன்று, உங்களைவிட சற்று அறிவில் குறைவானவர்களுக்கு கூட விழிப்புணர்வு இருப்பதால் கிடைத்து விடுகிறது. உங்களுக்கு அந்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் வாய்ப்புகளை தவற விட்டு விடாதீர்கள்.
உங்களுக்கு வழிகாட்டுதலுக்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர்வழிக்கல்விக்கென்று தனியாக ஆசிரியர்கள் குழு இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி உதவி மையம் செயல்படுகிறது.
பொருளாதார வசதி இல்லாத குழந்தைகளுக்கு அவர்கள் விண்ணப்பம் அளிப்பதிலிருந்து பயிலும் வரை உதவுவதற்கு விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை உருவாக்கி இருக்கின்றோம். அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த, உயர்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று, என்றாவது ஒருநாள் நீங்கள் சிறந்த நிறுவனத்தில் பணிபுரிந்து, உங்களது வாழ்வு உயரமடைந்தால் அதுதான் இந்த நிகழ்ச்சிக்கு பெருமை.எனவே, எல்லோருக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அந்த சிறந்த வாய்ப்புக்களை எதிர்காலத்தில் வெற்றிக்கான வாய்ப்புகளாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் அனைவரும் முன்னேற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கடந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் பயிற்சியும், வழிகாட்டுதலும் பெற்று, கிளாட், ஐ.ஐ.டி.டி.எம்- ஜே.இ.இ உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, தற்போது NLU, IITM, NCHM, APU போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலவுள்ள மாணவர்கள் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply