25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் சிறப்புகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் சிறப்புகள்

முற்காலத்தில் செண்பக வனமாக இருந்த இந்த தென்காசி பகுதியை பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் சிவபெருமான் மீது தீவிர பக்தி செலுத்தி வந்தான். ஒருமுறை அவனுக்கு காசி மாநகர் சென்று கங்கையில் நீராடி சிவபெருமானை வழிபட வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.உடனே மன்னன் தன் குல தெய்வமான முருகப் பெருமானை வேண்டி நிற்க, முருகப் பெருமானோ மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றைக் கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்து அருளினார். மன்னனும் அவ்வாறே காசி சென்று விசுவநாதரை தரிசித்து ஊர் திரும்பினான்.

பின்னர் பராக்கிரம பாண்டியன் தினமும் காசி சென்று விசுவநாதரை வழிபட இயலாததை எண்ணி, மனம் வருந்தினான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய ஈசன், மன்னா கவலைப் படாதே.. வடக்கே உள்ள காசிக்கு நீ வருவதற்கு பதிலாக, தட்சிண காசியாகிய இவ் விடத்திலேயே நான் சுயம்புவாக புதையுண்டு இருக்கிறேன் என்றும், இங்கு ஒரு கோவில் அமைத்து என்னை நீ தினமும் வழிபடலாம் என்றும்,
நான் இருக்கும் இடத்தை நீ கண்டறிய உனக்கு எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார்.

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது. இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை ஆவர் இத்தலத்தில்மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று இத்தல அம்மைக்கு வளைகாப்பு வைபவம்.ஆகியவைசிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும் காசிக்கு நிகரான சிறப்பையும். வானளாவிய ராஜ கோபுரத்தையும் பெற்றது தென்காசி காசி விஸ்வநாதர் கோவில். வடக்கே உள்ள காசிக்கு செல்ல முடியாதவர்கள், தெற்கில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்து அருளைப் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதால் தென்காசி என பெயர் பெற்றது 1445ம் ஆண்டில் பராக்கிரம பாண்டியனால் கட்டுமாண பணிகள்  துவங்கப்பட்டு அவரது தம்பி சடைய வர்ம குலசேகர பாண்டியனால் நிறைவடைந்தது.

தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம். 

தலவிருட்சம் : செண்பகமரம்.

கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் அகத்தியரால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ சக்கர பீடமே பராசக்தி பீடமாக விளங்கி வருகிறது. இந்த பீடத்திற்கு நேர் எதிரில் லிங்க சொரூபத்தில் சிவனும் எழுந்தருளி உள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News