எத்தனையோ பறவைகள் இருக்க, மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும்?
மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும் என மஹாபெரியவரிடம் கேட்டார் ஒருவர்.
"தன் குரலையே பெயராகக் கொண்டது காகம். 'மியாவ்' என கத்தும் பூனையையும், 'கிக்கி' எனக் கத்தும் கிளியையும் நாம் அப்படி அழைப்பதில்லை.
ஆனால் 'கா' எனக் கத்தும் இதை மட்டும் 'காகம்' என்றே அழைப்பது ஏன் தெரியுமா.? கா' என்றால் 'காப்பாற்று'. அதற்கு உணவிடும் போது, 'கா... கா...' என சத்தமிடுகிறோம். அதாவது முன்னோரை அழைத்து எங்களைக் காப்பாற்றுங்கள் என வேண்டுகிறோம். எங்கும் இருக்கும் பறவையான காகத்தை தேட வேண்டியதில்லை. அறிவும், அழகும் கொண்ட அப்பறவை அதிகாலையில் விழிப்பதோடு, நம்மையும் எழுப்புகிறது.
அது ஒருபோதும் தனியாக உண்ணாது. உணவு கிடைத்தவுடன் மற்ற காகத்துடன் பகிர்ந்துண்ணும். சூரியன் மறைந்ததும் இருப்பிடத்திற்கு சென்று ஓய்வெடுக்கும். இரவில் (இரவு 7:00 மணிக்குப் பின்) உண்ணக் கூடாது என வேதம் அறிவுறுத்துகிறது. இதை நாம் கடைபிடிக்கிறோமா... இல்லையே... முன்னோரின் அறிவுரையை நமக்கு எடுத்துச் சொல்கிறது காகம்.
நாம் உணவிடும் போது காகம் மகிழ்கிறது. அது உண்பதைக் கண்டு நாமும் மகிழ்கிறோம். இந்நிலையில் 'இருவருமே கடவுள்' என்கிறது அத்வைதம். இப்படி தத்துவத்தையும் காகம் நமக்கு உணர்த்துகிறது. அதற்கு உணவிடச் சொன்ன நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.
0
Leave a Reply