25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) பாலா தேவி கோல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) பாலா தேவி கோல்.

இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) பாலா தேவி கோல்

இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) 8வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த 8வது சுற்று லீக் போட்டியில் ஸ்ரீபூமி, சேது அணிகள் மோதின. இதில் ஸ்ரீபூமி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்ரீபூமி அணி சார்பில் பாலா தேவி 'கோல் (39, 49, 65வது நிமிடம்) அடித்தார். சேது அணிக்கு ஹதிஜா நந்தகோ (37 வது நிமிடம்), லிஷாம்பாபினா தேவி (89வது) தலா ஒரு கோல் அடித்து ஆறு தல் தந்தனர்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த மற்றொரு போட் டியில் நிடா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹோப்ஸ் அணியை வென்றது. 

ஸ்பெஷல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 33 பதக்கம். 

இத்தாலியில், அறிவு சார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடந்தது. இதன்  கடைசி நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, 6 வெண்கலம் என, 9 பதக்கம் கிடைத்தது. இந்திய நட்சத்திரங்கள், 8 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 33 பதக்கம் வென்றனர். 

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ராஷ்மிகா-வைதேகி 'சாம்பியன்' 

தாய்லாந்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர். இரட்டையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, வைதேகி சவுத்ரி ஜோடி, 'நம்பர்-2' ஆக உள்ள தாய்லாந்தின் புனின், ஜாப்பானின் யூகி நைட்டோ ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. 

கால்பந்து  'ஐ-லீக்' போட்டி  

'ஐ-லீக்' போட்டி  ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் அணி 4-0 என ஷில்லாங் லஜோங் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் 27 புள்ளியுடன் (7 வெற்றி) 5வது இடத்துக்கு முன்னேறியது.  

பாட்மின்டன்

சீனாவின் ஜின் வா குவோ, பாங் ஹுய் சென் ஜோடி ,ஆல் இங்கிலாந்து ஓபன் பைனலில் 21-16, 10-21, 23-21 என சக நாட்டை சேர்ந்த யான் ஷே பெங், யா ஜின் வெய் ஜோடியை வென்றது. 

T20 கிரிக்கெட் பெண்கள். 

மும்பையில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) 3வது சீசனுக்கான பைனலில் மும்பை அணி (149/7), 8 ரன் வித்தியாசத்தில் டில்லியை (141/9) வீழ்த்தி, கோப்பை வென்றது. இது, உலகின் பல்வேறு பகுதி களில் நடக்கும் 'டி-20' லீக் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த 12வது கோப்பை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News