அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 100 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் என மொத்தம் ரூ.3.50 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (02.07.2025) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு ஆண்டு காலத்தில் பல்வேறு திட்டங்களை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க இடமும், குடியிருக்க வீடு, வேண்டுமென்ற எண்ணத்தோடு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தினை செயல்டுத்தி வருகிறார்.தமிழ்நாட்டினுடைய பல பகுதிகளில் குடிசைகள் இருந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கனவு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அந்த வகையில் 1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர்தான் சென்னை மாநகரம் முழுவதும் இருக்கக்கூடிய குடிசைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி குடிசையில் குடியிருந்த அனைவரும் அடுக்குமாடிகளில் குடியேற வீடுகளை உருவாக்கி தந்தார்.
அதன் தொடர்ச்சியாக, டாக்டர். கலைஞர் அவர்கள், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் குடிசை பகுதிகளை கண்டறிந்து அவற்றை எல்லாம் காங்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இருந்த திட்டத்தை செயல்படுத்தினார்.இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 360 சதுர அடி பரப்பளவில் காங்கிரீட் வீடுகள் கட்டப்படுவதற்கு ஏறத்தாழ ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை,எளிய மக்களுக்கு எல்லாம் வீடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை நாம் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறார்கள்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - 2025 -ஆம் ஆண்டில் 11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில் 2237 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.அதனடிப்படையில், அருப்புக்கோட்டையில் 83 பயனாளிகளுக்கும், சாத்தூரில் 10 பயனாளிகளுக்கும், விருதுநகரில் 7 பயனாளிகளுக்கும் தலா ரூ.3.50 இலட்சம்; மதிப்பில் இன்று மொத்தம் 100 வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மழைக்காலத்திற்கு முன்பாக வீடுகளை கட்ட வேண்டும் என்பதற்காக பயனாளிகளை எல்லாம் தேர்வு செய்து, இன்றைக்கு ஒரு பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படுகிறது.மேலும், தகுதியான பயனாளிகள் விடுபட்டிருந்தால், அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக வீடு வழங்கும் திட்டத்தின் வீடுகள் வழங்கப்படும். இது ஒரு மகத்தான திட்டம். இதற்கான பணிகளை விரைவாக தொடங்கி, வீடுகளை கட்டி மனநிறைவோடு அந்த வீடுகளில் நீங்கள் வாழ வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், இன்று நமது மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.எனவே தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் உடைய பயன்களை பொதுமக்கள் பெற, ஏழை எளிய மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கக்கூடிய காங்கிரீட் வீடுகளை கட்டுவதற்கு அனைத்துத் துறை அலுவலர்கள் குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
0
Leave a Reply