தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2024-2025 கோடை பருவத்தில் இது வரையிலும் 3,376 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.5.83 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025 கோடை பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திடும் பொருட்டு இராஜபாளையம், வத்ராயிருப்பு மற்றும் காரியாபட்டி ஆகிய வட்டங்களில் 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த 26.05.2025 முதல் செயல்பட்டு வருகிறது.
மேற்படி நெல் கொள்முதல் நிலையங்களில் 14.06.2025 வரை 393 விவசாயிகளிடமிருந்து 3375.960 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.5,83,00,000/- (ரூபாய் ஐந்து கோடியே என்பத்து மூன்று லட்சம் மட்டும்) விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லினை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply