ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் இந்தியா 260 தங்கப் பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை வென்றது.
23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னைநேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த 35-100 வயதுடைய 3,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.போட்டிகள் நேற்று நிறைவுற்றன.
இந்தியா 260 தங்கம், 253 வெள்ளி, 277 வெண்கலம் என மொத்தம் 790 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இரண்டாவது இடத்தை இலங்கை (39 தங்கம், 50 வெள்ளி, 39 வெண்கலம்), மூன்றாவது இடத்தை தாய்லாந்து (39-தங்கம், 26 வெள்ளி, 11 வெண்கலம்) பெற்றன.
0
Leave a Reply