வசிக்கும் வீடு நறுமணத்துடன் திகழ...
உங்களுக்கு மிகவும் பிடித்த நறுமண எண்ணெயின் சில துளிகளை முதலில் தேர்ந்தெடுக்கவும்(எ.கா. லாவெண்டர், எலுமிச்சை அல்லது யூகலிப்டஸ்) அத்துடன் நீர் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பித் தெளித்து அறையை புத்துணர்ச்சியூட்டும் வாசனையால் நிரப்பலாம்.
உலர்ந்த பூக்கள், மணமுள்ள மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு கைகளால் நன்கு நசுக்கி அதில் சில துளிகள் நறுமணம் தரும் எண்ணெய்களைச் சேர்க்கவும். இந்தக் கிண்ணத்தை ஒரு அறையின் மூலையில் வைத்து காற்றில் பரவும் நறுமணத்தை அனுபவிக்கலாம்.
ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் நறுமனா எண்ணெய்களை கலந்து அறையில் வைத்தால் அக்கலவை காற்றில் பரவும். அது வீட்டின் துர்நாற்றத்தை உறிஞ்சி விடுவதோடு, நல்ல மணத்தையும் பரப்பும். அதன் செயல்திறனை பராமரிக்க அந்தக் கலவையை தொடர்ந்து மாற்றுவது நல்லது அதேபோல, அடுப்புக் கரியையும் ஆங்காங்கே வைத்தால் காற்றில் உள்ள துர்நாற்றத்தை நீக்கலாம்.
ஒரு அழகான கண்ணாடி அல்லது பித்தளைப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் மனதுக்குப் பிடித்த மல்லிகை, ரோஜா, சாமந்தி போன்ற மலர்களின் இதழ்களை பரப்பி வைத்தால் கண்களுக்கு இனிமையாகவும் நாசிக்கு மணமாகவும் இருக்கும்.
0
Leave a Reply