மருத்துவ பழமொழிகள்.
1. ஆறு வெற்றிலை இருந்தால் அறியாதவன் வீட்டிலும் சாப்பிடலாம். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
2. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் முதுமையிலும் இளமை.
3. மேகம் போக்கும் ஆலம்பட்டை, பித்தம் போக்கும் வேப்பம் பட்டை
4. ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா.
5. ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்.
6. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
7. மேகம் முற்றினால் வெள்ளை. வெள்ளை முற்றினால் வெட்டை வெட்டை முற்றினால் கட்டை
8.இறங்கு பொழுதில் மருந்து குடி.
9. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசியைப் போக்க.
10. குடலைக் கழுவி உடலைப் பேண்
0
Leave a Reply