25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மல்லாங்கிணரில் (19.01.2025)  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் செய்தியாளர் சந்திப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மல்லாங்கிணரில் (19.01.2025) நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் செய்தியாளர் சந்திப்பு

2011 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.1,02,000 கோடியாக இருந்தது. அப்போது நமது மாநிலத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.7,51,000 கோடியாக இருந்தது.கடந்தாண்டு தாக்கல் செய்த வரவு செலவு திட்ட பட்ஜெட்டின் அளவு ரூ.4,12,000 கோடி.அதே காலகட்டத்தில் நமது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு  ரூ.31.55 இலட்சம் கோடியாக வளர்ந்து இருக்கிறது.2011 ஆம் ஆண்டிற்கும் தற்போது உள்ள காலத்திற்கும்  உள்ள வித்தியாசத்தை இந்த புள்ளி விவரங்கள் மூலமும் நாம் கடன் வாங்கும் நுட்பத்தையும் அறிந்து கொள்ள முடியும்.இந்த உள்நாட்டு உற்பத்தி  மதிப்பின் அளவைப் பொறுத்துதான், ஒரு மாநிலம் கடன் வாங்க கூடிய திறன் எவ்வாறு  இருக்கிறது.அந்தக் கடனுக்குறிய வட்டியை செலுத்தக்கூடிய திறன் எவ்வாறு இருக்கிறது. அந்த கடனை எவ்வாறு அடைக்க முடியும் என்பதை நாம் உணர முடியும்.

  ஒட்டுமொத்தமாக  மாநிலத்தின் பொருளாதாரம் வளர வளர நம்முடைய கடன் திருப்பி செலுத்தக்கூடிய திறன் உயரும் என்பது ஒரு சாதாரண அடிப்படை விதி.இதைத் தாண்டி ஏற்கனவே  நிதிக் குழு ஒவ்வொரு மாநிலத்திற்கும்   எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை நிர்ணயிக்கிறது. 15- வது நிதி குழுவின் படி,   2021- 22 ஆம் ஆண்டில் தமிழ்நாடு  மாநிலம் 28.7 சதவிகிதம் கடன் வாங்கலாம் என்று சொல்லுகிறது. ஆனால்  நாம் வாங்கியது 27.01 சதவிகிதம். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கு நாம் வாங்கி இருக்கக் கூடிய கடனுடைய சதவீதம்.2022- 23 ஆம் ஆண்டு நிதிக்குழு நமது மாநிலத்திற்கு பரிந்துரைத்தது 29.3  சதவிகிதம். ஆனால் அதற்கும் குறைவாக 26.87 சதவீதம் கடன் வாங்கி இருக்கின்றோம்.2023- 24 ஆம் ஆண்டில் 29.1 சதவிகிதம் பரிந்துரைத்ததில்,  மிகக்குறைவாக 26.75 சதவிகிதம் கடன் அளவு வைத்திருந்தோம்.2024-25  கடந்தாண்டு 28.9 சதவீதம் நிர்ணயித்ததில் 26.4 சதவீதம் தான் வாங்கி இருக்கின்றோம்.

இந்த புள்ளி விவரங்கள் எதை காட்டுகிறது என்றால், இந்த காலகட்டத்தில் நிதிக்குழு என்ன பரிந்துரை செய்திருக்கிறதோ அதற்கு உட்பட்டு தான், அதற்கு குறைவாகத்தான் நம்முடைய கடன்  அளவை நாம் பெற்று  வருகிறோம். எனவே இந்த வரம்புக்குள் தான் நாம் கடன் வாங்கி இருக்கிறோம் என்பதை   கூறிக் கொள்கிறேன்.வாங்கக்கூடிய கடனை எப்படி திருப்பி செலுத்த வேண்டும் என்பதையும், வரம்புக்குள் நாம் கடன் வாங்கி இருக்கிறோமா என்பது தான் முக்கியம். தமிழ்நாட்டினுடைய நிதி நிலைமை என்பது கட்டுக்குள் இருக்கிறது.இந்த முறை வணிக வரியில் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் கோடி அதிகமாக வரி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இது  நம்முடைய திறமையான நிதி மேலாண்மையை காட்டுகிறது.தொழில்நுட்ப ரீதியாக புள்ளி விவரங்கள் ஆராய்ந்து செயல்பட்டு இருக்கக்கூடிய காரணமாகத்தான் வணிக வரிகள் உடைய சதவீதம் உயர்ந்திருக்கிறது.

 குறிப்பாக நமது மாநிலத்தின் வளர்ச்சி சதவீதம் என்பது 14 சதவீதமாக வந்திருப்பதற்கு நாம் எடுத்திருக்கக் கூடிய பல்வேறு முன்னெடுப்புகள்  தான் காரணம்.பொதுவாக நிதி நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்கு  நாம் Fund tracking system மூலம் கண்காணிக்கிறோம். மேலும் ஒவ்வொரு Project-  க்கும் எப்பொழுது நிதியை விடுவிக்க வேண்டும் என்ற அளவிலே நாம் நிதி மேலாண்மையில் நுட்பமாக செயல்பட்டு இருக்கக்கூடிய காரணத்தினால் நம்முடைய நிதி ஆதாரங்களாக இருந்தாலும் சரி, நிதி மேலாண்மையாக இருந்தாலும் சரி, மிக சிறப்பாகவே அது இருக்கிறது என்பதை நான் கூறிக் கொள்கிறேன்.

 மேலும், பல திட்டங்களுக்கு நாம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.மெட்ரோ ரயில் திட்டத்திற்குமாநிலத்தினுடைய சொந்த நிதியில் இருந்து ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து  செலவழித்து இருக்கிறது. மின்சார வாரியத்திற்கு ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடி  கொடுத்திருக்கின்றோம்.அதுபோலதொடர்ச்சியான இயற்கை பேரிடர்களுக்காக மாநில அரசு நிதி செலவழித்து இருக்கின்றது. அதற்காக மத்திய அரசிடம் ரூ.776 கோடி அதுவும் நமது மாநில பேரிடர் நிதியிலிருந்து வரக்கூடிய தவணையில் இருந்து பெறப்பட்டு இருக்கிறது.

  இதுபோக பல்வேறு புதிய திட்டங்களுக்கு நிதி கொடுத்து கொண்டு வருகிறோம். ஒன்றிய அரசிடமிருந்து  வரக்கூடிய நிதி நமக்கு வந்து சேரவில்லை.சம்ரக்ஷயா அபியான் திட்டத்திற்கு வரவேண்டிய ஏறத்தாழ ரூ.2000 கோடிக்கு மேலான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.அதுபோல பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு தான் அதிகமாக பணத்தை கொடுக்கிறது.  கலைஞர்வீடுவழங்கும்திட்டத்தின்கீழ்ரூ.3.50இலட்சம்கூடுதலாகபணம்ஒதுக்கிமாநிலஅரசினுடையசொந்தநிலையில்இருந்துசெலவழிக்கின்றோம்.அதுபோல தமிழ் புதல்வன்,  காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம்,  நான் முதல்வன் திட்டம் போன்ற  எல்லா திட்டங்களையும் மாநில அரசாங்கம் சொந்த நிதியில் இருந்து செலவழித்து வருகிறது.

 இந்த திட்டங்களுக்கு உரிய நிதியை நமக்கு வரக்கூடிய வருவாயில் இருந்து  நாம் திறம்பட செய்யக்கூடிய  காரணங்களினால் தான், பட்ஜெட்டில் எந்த திட்டத்திற்கு என்ன நிதி  ஒதுக்கின்றோமோ அதை தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கி  சிறப்பான முறையில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது என  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News