ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, கட்டுக்குள் வைக்கும் முருங்கைக்காய்
முருங்கை மரத்தில் எல்லாமே சத்துக்கள்தான். இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் என ஒவ்வொரு பாகமும், உடலிலுள்ள நோய்களை தீர்க்கக்கூடியது.அந்தவகையில், முருங்கைக்காய்களும் தவிர்க்க முடியாதவை.
புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் என்ற 4 சத்துக்களின் மிகச்சிறந்த ஆதாரமாக முருங்கை திகழ்வதே இதன் பிளஸ் பாயிண்ட்டாகும்.. இதிலுள்ள வைட்டமின் C சத்தானது, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகம். மற்ற அனைத்து கீரைகளில் இருப்பதைவிட, இந்த முருங்கையில் ஏகப்பட்ட இரும்புச் சத்துக்கள் உள்ளன. இதிலிருக்கும் பொட்டாசிய சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகம்.
இதிலிருக்கும் புரோட்டின் சத்துக்களோ, முட்டைக்கு இணையானது. கால்சியம் சத்துக்கள், பசும்பாலைவிட,4 மடங்கு அதிகம். முருங்கைக்கீரைகள் ரத்தவிருத்தியை தருவதைப்போலவே, இந்த காய்களும் இரும்புச்சத்து கொண்டிருக்கின்றன. அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் தவறாமல் முருங்கையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த இந்த முருங்கை உதவுகிறது.. வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் Cயின் சிறந்த ஆதாரமாக உள்ளதால், ரத்த சோகை வருவதைத் தடுக்கிறது.
முருங்கைக்காயில் உள்ள இரும்புச்சத்து உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. தொற்றுக்கள் உண்டாக்குவதை தவிர்க்கக்கூடிய வைட்டமின் C முருங்கைக்காயில் உள்ளது. வைட்டமின் A உள்ளதால், மூளை மற்றும் கண்பார்வை வளர்ச்சியும் மேம்படும். கர்ப்பிணிகள் முருங்கையை அடிக்கடி சாப்பிட வேண்டும். தாய்க்கு மட்டுமல்லாமல், வயிற்றிலுள்ள குழந்தைக்கும், அதிக நன்மையை தருவதால், முருங்கைக்காய் கர்ப்ப காலத்தில் ஒரு சிறந்த சப்ளிமெண்டாகவே செயல்படுகிறது. கர்ப்ப காலத்தில் 100 கிராம் அளவு முருங்கைக்காய் சாப்பிடுவதால், வயிற்றிலுள்ள கருவினுடைய உறுப்புகள் நன்றாக வளரும். எனவே டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று கர்ப்பிணிகள் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள், மூலநோயால் அவதிப்படுபவர்கள், வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த காய் சிறந்த மருந்தாகும்காரணம், ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, கட்டுக்குள் வைக்கும்.
0
Leave a Reply