தமிழகத்தின் நர்மதா புதிய தேசிய சாதனை.( துப்பாக்கி சுடுதல் )
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத் தரகாண்ட்டில் நடக்கிறது. 37 அணிகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதல் போட்டியில் 29 அணிகளில் இருந்து 364 பேர் களமிறங்கியுள்ளனர்.
இதில் பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச்சுற்றில் ஹரியானாவின் ரமிதா (634.9), மஹாராஷ்டிராவின் ஆர்யா போர்ஷே (634.5), தமிழகத்தின் நர்மதா (634.4) முதல் மூன்று இடம் பெற்றிருந்தனர்.நேற்று பைனல் நடந்தது. இம்முறை சிறப்பாக செயல்பட்ட 23 வயது நர்மதா 254.4 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது.
0
Leave a Reply