25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்

  உ.பி.,யின் பிரக்யாராஜில் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 23வது சீசன்,.நேற்று நடந்த ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நடந்தது. தமிழக வீரர் ரவி, 15.44 மீ., துாரம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

பெண்களுக்கான 200 மீ., ஓட்டபைனல் நடந்தது. ஏற்கனவே 400மீ., ஓட் டத்தில் வெள்ளி வென்ற தமிழகத்தின் தேஷிகா கள மிறங்கினார். இம்முறை 24.44 வினாடி நேரத்தில் வந்த தேஷிகா, தங்கம் கைப்பற்றினார். 

 முதல் இரு இடங்கள் பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி யில் தமிழகத்தின் சாதனா (12.75 6.,), பவீனா (12.55 மீ.,) தங்கம், வெள்ளி வசப்படுத்தினர். 

 தமிழகத்தின் பாண்டியன், 21.33 வினாடி நேரத்தில் வந்து, ஆண்களுக்கான 200மீ. ஓட்டத்தில், தங்கப்பதக்கம் வென்றார்.. 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் திருமலை (54.33) ஐந்தாவது இடம் பிடித்தார்.

 உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் பிரசாந்த் ,ஆண்களுக்கான (2.00 மீ.,) 7வது இடம் பிடித்தார். தமிழக அணி 6 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் கைப்பற்றியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News