இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்து வேப்பம்பழம்.
தமிழகத்தின் முக்கிய மரங்களில் வேம்புவும் ஒன்று. இதன் இலை முதல் பட்டை வரை கசப்புத்தன்மை கொண்டவை என்றாலும், வேப்பம் பழங்கள் சற்று இனிப்பு தன்மை உடையவை. மருத்துவ குணங்களையும் கொண்டவை. ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான மாதங்களில் பழுத்து உதிரும். இவை, இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்தாகும். தோல் புண்கள் மற்றும் பருக்களை குணப்படுத்துகிறது. உடலில் பல நோய்களை இயற்கையாகவும் வேகமாகவும் குணப்படுத்துகிறது. வேப்பம் பழ விதைகளில் இருந்து எண்ணெய் பெறப்படுகிறது. வேப்ப எண்ணெயில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. குறிப்பாக, முடிகளில் வறட்சியை நீக்கி, சருமம், முகத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். வேப்பம் பழங்கள் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, 'பிளாவனாய்டுகள்' என்ற பொருள் நிறைந்து இருப்பதால், உடலில் புற்றுநோய் உருவாகும் அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பழங்களை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் என்று சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.
0
Leave a Reply