நீரஜ் சோப்ராவுக்கும்,டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோர் திருமணம்
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 27. 2021, டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று வரலாறு படைத்தவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் கில் வெள்ளி வென்றார். ஹரியானாவை சேர்ந்த இவர், ஹிமானியை 25, காதலித்து வந்தார்.
ஹிமானி மோர் தேசிய அளவில்டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அமெரிக்காவின் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலையில், விளையாட்டு மேலாண்மை படித்து வருகிறார். இங்கு தான் நீரஜ் சோப்ரா, ஹிமானியை முதன் முதலில் சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள்ள விரும்பிய நீரஜ், குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கினார். இவர்களது திருமணம், இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜன. 14-16 ல் நடந்தது.
0
Leave a Reply