25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மருத்துவ குணம் நிறைந்த நுங்கு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மருத்துவ குணம் நிறைந்த நுங்கு.

ஒரு பனை இருந்தால் அதைச் சுற்றி பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை தொடங்கும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறு கின்றனர். ஏனெனில், பனை மரத்தை நம்பி பல்வேறு சிறு உயிரினங்கள் மற்றும் பறவைகள் வாழ்கின் றன., கோடை காலத்தில் பனை தரும் நுங்கு அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும்.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தநுங்கு விற்பனைக்கு வரும். கோடை வெயிலை தாங்கி மனித உடல் குளிர்ச்சி பெற நுங்கு துணை புரிகிறது.

நுங்கில் உடலுக்கு ஊட்டம் தரும் வைட்டமின் பி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், துத்தநாகம். பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

வெப்பத்தால் உடலில் உருவாகும் சோர்வை நீக்கி உடலின் வெப்பநிலையை சமநிலைசெய்கிறது. கோடையில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்படும். இதனைதடுப்பதில் நுங்கு முதலிடம் வகிக்கிறது. மேலும், உடல் வெப்பத் தால் குடலில் ஏற்படும் வறட்சியை தணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை போக்குகிறது.

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தோல் நோய்கள், கொப்புளங்களை தடுக்க நுங்கு அவ்வப்போது உண்ணலாம். நுங்கில் உள்ள அந்த்யூசைன் என்ற ரசாயனம் மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *