25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் (01.09.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ்  ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பேரிடர் அவசர காலங்களில் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.அதன்படி, மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், தீயணைப்பான்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் போது, மீட்பு பணிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படும் ட்ரோன்களும் (எண்ணம்-2) மற்றும் அலைபேசி சமிக்சை அல்லாத பகுதிகளில் பயன்படுத்தத் தக்க வாக்கி டாக்கிகளும் (எண்ணம்-6 ஜோடிகள்) என மொத்தம் ரூ.17 இலட்சம் மதிப்பில் 17 வகையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கொள்முதல் செய்யப்பட்டுள்ள பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒப்படைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் திரு.சந்திரகுமார், தனி வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) திரு.லோகநாதன், உதவி தீயணைப்புத்துறை அலுவலர், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News