தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்,105 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், (18.09.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், சாத்தூர் வட்டாரத்தில் ஊரக மற்றும் நகர்ப்புர பகுதிகளில் உள்ள 105 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 871 உறுப்பினர்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார்.
அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்,சுய உதவிக்குழு வங்கிகடன் சார்ந்த, 51 குழுக்களுக்கு ரூ.511 இலட்சம் மதிப்பிலும், அமுதசுரபி நிதி சார்ந்த, 15 குழுக்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலும், வட்டார வணிக வள மைய கடன் சார்ந்த, 25 குழுக்களுக்கு ரூ.12.50 இலட்சம் மதிப்பிலும், வாழ்வாதார நிதி கடன் சார்ந்த, 3 குழுக்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பிலும், சுய உதவிக்குழு வங்கிக் கடன் சார்ந்த, 10 குழுக்களுக்கு ரூ.66.10 இலட்சம் மதிப்பிலும், பகுதி அளவிலான கூட்டமைப்பு சார்ந்த, 1 குழுவிற்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 105 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 871 மகளிர்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.ஒரு காலகட்டத்தில் பெண்கள் வெளியில் வரமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. இன்றைய காலகட்டத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தான், ஆண்களுக்கு சமமாக சுய உதவிக் குழு உதவியுடன் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நாகரீகம் ஏற்பட மாற்றங்களும் ஏற்படும். பெண்கள் வெளியில் வந்து தங்களின் மரியாதை பிறப்பதற்கு காரணமாக இருந்தது திராவிட மாடல் தான். பெண்கள் வெளியில் வந்து முன்னேற வேண்டும். ஆணுக்கு பெண் சலித்தவள் அல்ல என்றும், ஆணும், பெண்ணும் சமம் என்றும், பெரியாரைத் தொடர்ந்து, அண்ணாவைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரைத் தொடர்ந்து கூறியவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இந்த மகளிர் சுய உதவி குழு செயல்படுத்தப்படுகிறது.
சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ கடன் உதவி பெறும் போது அதனை திருப்பி செலுத்துவதில் பெண்கள் நியாயமாக உள்ளார்கள்.எவ்வித அடமானம் இல்லாமல் ரூ.50 இலட்சம் வரை கடன் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு அரசு பெண்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கடனுக்கான பணத்தை கட்டும் போது, அடுத்த தடவை அதிகப்படியான கடன் உதவி தரப்படுகிறது. இதன்மூலம் பெண்கள் தொழில் செய்யலாம். சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கலாம். அதனை உருவாக்கித்தந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதனை மென்மேலும் மேம்படுத்தி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஈட்டிய வருமானத்தில் வேறு யாரையும் எதிர்பாராமல் மகளிர் அனைவரும் சுயமாக தொழில் புரிய வேண்டும். உங்களால் முடியும் என்று நினைத்து அதனை நிச்சயமாக முடித்து காட்ட வேண்டும். பெண்களுக்கு இல்லாத சக்தி யாருக்கும் இல்லை. சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.நல்ல முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என அமைச்சர்அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்டத்தில் 14,083 உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் 1 இலட்சத்து 67 ஆயிரம் மகளிர் உள்ளனர். இதில்,2024-2025ல் 982 குழுவினர் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 ல் 662 புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு குழுக்களைச் சேர்ந்த 10,700 உறுப்பினர்களுக்கு 2024-2025 ஆண்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
2025-2026 ல் 4,107 குழுவினருக்கு 432 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக கடந்த வாரம் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் சுய உதவிக்குழு கடனுதவி சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்று அருப்புக்கோட்டை வட்டாரத்தில் சுமார் ரூ.9 கோடி கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது, சாத்தூரில் 105 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 871 உறுப்பினர்களுக்கு ரூ.6.05 கோடி கடனுதவி வழங்கப்படவுள்ளது.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சாத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.குருசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி நிர்மலா கடற்கரை ராஜ், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply