நம் இந்திய ராணுவம் ரயிலில் இருந்து ஏவுகணைசோதனையில் சாதனை படைத்தது.
இந்திய ராணுவத்துக்கு பக்கபலமாக டி.ஆர்.டி.ஓ., உருவாக்கிய அதிநவீன அடுத்த தலைமுறை அக்னி ஏவுகணைகள், இருந்து வருகின்றன.2,000 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை ,அடுத்த கட்ட முயற்சியாக, துல்லியமாக தாக்கி அழிக்கும் 'அக்னி நடுத்தர வகை, பிரைம் ' ஏவுகணையைடி.ஆர்.டி.ஓ., உருவாக்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு ரயிலில் இருந்து ஏவும் சோதனை நடத்தி, திட்டமிட்ட படி இலக்கை தாக்கி அழித்தது.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ,'அக்னி பிரைம்' ஏவுகணையை உருவாக்கிய டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகளை, பாராட்டினார்.இந்த ஏவு கணையை நாட்டின்எந்தவொரு பகுதிக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். எந்த இடத்தில் இருந்தும், குறுகிய காலத்திற்குள், ஏவுகணையை செலுத்தி, எதிரிகளின் இலக்கை துல்லியமாக அழிக்க முடியும்.
.இதுவரை , சீனா ,அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட ஒரு சில நாடுகளிடம் மட்டுமே ரயிலில் இருந்தபடி ஏவுகணை செலுத்தும் திறன் இருந்தது. இந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
சாலை வசதி இல்லாத இடங்களில் கூட, ரயில் மூலம், அக்னி ஏவுகணையை எடுத்துச் செல்ல முடியும். குறிப்பாக போர் சமயங்களில், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதக் கிடங்குகளை எதிரிகள் குறி வைத்து தாக்கக்கூடும்.அந்த நேரங்களில், ரயில்வே குகைகளில், ஏவுகணைகளை மறைத்து வைத்து, எதிரிகளின் கண்களுக்கு தெரியாமல் மறைக்க முடியும்.
இந்த சோதனையை நடத் வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகளை பாராட்டு கிறேன். இதன் மூலம், ரயிலில் இருந்தபடி ஏவுகணை ஏவும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது,என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
0
Leave a Reply