25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பள்ளிகொண்ட நரசிம்மர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பள்ளிகொண்ட நரசிம்மர்.

கடலுார் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை சரநாராயணப்பெருமாள் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷத்தன்று இவரை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.

அசுரர்களான தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலியிடம் பறக்கும் கோட்டைகள் இருந்தன. அவற்றில் பறந்து சென்று தேவர்களையும், முனிவர்களையும் தாக்கினர். சிவபெருமானிடம் முறையிடவே, அவர் அசுரர்களுடன் போர் புரிய தயாரானார். அதற்காக தேர் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரியனும், சந்திரனும் சக்கரங்களாக மாறினர். பூமி தேரின் தட்டாக ஆக்கப்பட்டது. நான்கு வேதங்களும் குதிரைகளாக தேரில் பூட்டப்பட்டது.

மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் ஆதிசேஷனை அதில் நாணாக பூட்டினார், பிரம்மா தேரின் சாரதியாக அமர்ந்தார், மகாவிஷ்ணுவே அம்பாக மாறி அசுரர்களின் அழிவுக்கு துணை நின்றார். அவரே 'சர நாராயணப் பெருமாள்' என்னும் பெயரில் இங்கு குடி கொண்டிருக்கிறார். சரம் என்ற சொல்லுக்கு அம்பு என பொருள். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மகாவிஷ்ணுவின் சிலை சாளக்கிராம கற்களால் ஆனது. பாரதப்போர் முடிந்ததும் பிராயச்சித்தம் தேடிய அர்ஜுனன் இங்கு வழிபாடு செய்யபாவம் நீங்கப் பெற்றார். 

செங்கமலத்தாயார் தனி சன்னதியில்இருக்கிறார். மாதம் தோறும் உத்திர நட்சத்திரத்தன்று தாயாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. வழக்கமாக கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு மட்டும் கைகட்டி சேவை செய்யும் நிலையில் உள்ளார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளான ஸ்ரீதேவியை மகாவிஷ்ணு இங்கு மணம் செய்தார். இத்தலத்தை தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். மகாலட்சுமியின் அம்சமான வில்வம் தலவிருட்சமாக உள்ளது.

இங்குள்ள நரசிம்மர் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அசுரனான வக்ரனை வதம் செய்த களைப்பு தீர நரசிம்மர் இங்கு தங்கியுள்ளார். பிரதோஷத்தன்று நரசிம்மரை வழிபட்டால் சுகபோக வாழ்வு கிடைக்கும்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News