உடல் வெப்பத்தைக் குறைக்கும் பன்னீர் ஆப்பிள் .
பன்னீர் ஆப்பிள் என அழைக்கப்படும் ஜம்புக்காய் சாறு கல்லீரல் மற்றும் மூளை சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் நம்மை காக்கும்.மேலும் காய்ச்சல், வாதம் மற்றும் கை கால் வலிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.இது நீர்ச்சத்து நிறைந்து, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலுக்குச் சக்தியளிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது.
பன்னீர்ஆப்பிள்(RoseApple/Jambu) 90% நீர்ச்சத்து கொண்ட சத்தான கோடைகாலப் பழமாகும். இது வெள்ளை முதல் அடர் ஊதா நிறத்தில், கேஷு ஆப்பிள் மற்றும் சாதாரண ஆப்பிள் கலந்த வடிவில் இருக்கும். இந்த பழம் கல்லீரல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.தாகத்தைத் தணிக்கும், உடலுக்கு நீர்ச்சத்தளிக்கும்.வைட்டமின்B மற்றும்C சத்துக்கள் உள்ளன. பச்சையாக உண்ணலாம், சாலட் மற்றும் ஊறுகாய் செய்யப் பயன்படுகிறது.
0
Leave a Reply