ஜனாதிபதி திரவுபதி முர்மு 71 பத்ம விருதுகளை வழங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் நேற்று நடந்த விழாவில்71பத்ம விருதுகளை வழங்கினார்.நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்த நிலையிலான இந்த உயரிய விருதுகள் இந்த ஆண்டுக்காக கடந்த ஜனவரி மாதம்25ந்தேதி அறிவிக்கப்பட்டது.பத்ம விபூஷண் விருதுகள் 7 பேருக்கும். பத்மபூஷண் விருதுகள் 19 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 113 பேருக்குமாக மொத்தம் 139 விருதுகள் அறிவிக்கப்பட்டன.தமிழ்நாட்டில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
0
Leave a Reply