ரிசர்வ் வங்கி.
அரசின் கருவூலமாக விளங்கும் இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மத்திய வங்கி மட்டுமின்றி ,இந்தியாவின் நாணயத்தை யும்,ரூபாய் நோட்டுகளையும் வெளியிடுகிறது. இந்த வங்கிதான் நாட்டின் பல பொருளாதார நட வடிக்கைகளை இயக்கி வருகிறது. பொதுமக்கள் மற்ற வங்கிகளைப் பயன் படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமையின் கீழ் செயலாற்ற பல வங்கிகளை அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கியாக செயல்படுகிறது. ரிசர்வ் வங்கியைப்பொதுமக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு கண்காணித்தும் வருகிறது
. ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே நாட்டின் பொருளாதாரம் மதிப்பிடப்படுகிறது. தொடக்கத்தில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டது. பின்னர் 1937-ம் ஆண்டு முதல், மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழு வதும் பல வட்டாரக் கிளைகள் உள்ளன. முதலில் தனியாரால் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, 1949-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.
0
Leave a Reply