விளையாட்டு போட்டிகள் 8th FEBRUARY
டென்னிஸ்
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் ஆண்கள் அணிகளுக்கான டென்னிஸ் பைனலில் தமிழகம், கர்நாடகா மோதின. முதல் போட்டியில் தமிழகத்தின் அபினவ் சண்முகம் 3-6, 7-6, 6-4 என ரிஷி ரெட்டியை வீழ்த்தினார்.
இரண்டாவது போட்டியில் தமிழகத்தின் மணிஷ் சுரேஷ்குமார், பிரஜ்வல் தேவை சந்தித்தார். இதில் மணிஷ் 5-7, 6-4, 6-4 என வென்றார். முடிவில் 2-0 என வெற்றி பெற்று, தமிழக அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ஜப்பானின் மெய்யமாகுச்சி மோதினர்.இதில் மாயா ரேவதி 6-4, 3-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தார்.
இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்பரே, நெதர்லாந்தின் அரி யோன்ஹார்டோனோ, ஜோடி 2-6, 6-4, 10-2 என பிரிட்டனின் ஈடன் சில்வா, ரஷ்யாவின்அனஸ்டாசியா, டிகோனோவா ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
செஸ்
ஜெர்மனியில் நேற்று துவங்கிய பிரீஸ்டைல் தொடரின் முதல் நான்கு சுற்று முடிவில், உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், 1.5 புள்ளியுடன் (3 'டிரா', 1 தோல்வி) ஆறாவது இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட்
இந்தியாவின் முதல் தர ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 90 வது சீசன்.லீக் சுற்று முடிந்த நிலையில் இன்று காலிறுதி போட்டிகள் துவங்குகின்றன. நாக்பூரில் நடக்கும் போட்டியில் தமிழகம், விதர்பா அணிகள் மோதுகின்றன.
குத்துசண்டை
பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவு பைனலில் அசாமின் லவ்லினா, சண்டிகரின் பிரான்ஷு மோதினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா, 5-0 என எளிதாக வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார்.
காமன்வெல்த் போட்டியில் 60 கிலோ பிரிவு பைனலில் வெண்கலம் கைப்பற்றிய, வீராங்கனை சர்வீசஸ் ஜாஸ்மின், 5-0 என, உலக சாம்பி யன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மணிஷாவை (ஹரியானா) சாய்த்து தங்கம் வசப்படுத்தினார்.
ஆண்களுக்கான வெல்டர்வெயிட் (63.5 கிலோ) பிரிவு பைனலில் ஆறு முறை ஆசிய சாம்பியன் ஆன அசாமின் ஷிவா தபா, சர்வீசஸ் அணியின் வன்ஷாஜ் மோதினர். இதில் ஷிவா தபா 3-4 என போராடி தோற்க, வெள் ளிப்பதக்கம் கிடைத்தது. வன்ஷாஜ் தங்கம் வென்றார்.
0
Leave a Reply