25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் இந்தியா 8 பதக்கங்கள் வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் இந்தியா 8 பதக்கங்கள் வென்றது.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில்,  ஜூனியர் பெண்களுக்கான 'டிராப்' பிரிவில் போட்டி நடந்தன. அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா, ஒட்டுமொத்தம் ஆஷிமா, பிரீத்தி களமிறங்கினர். 319 புள்ளி எடுத்து தங்கப்பதக்கம் கைப்பற்றினர். சீனா, குவைத் அடுத்த இரு இடம் பிடித்தன.

அடுத்து தனிநபர் பிரிவு போட்டி நடந்தன. இதில் துவக்கத்தில் இருந்து இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். முடிவில் 43 புள்ளி எடுத்த நீரு, தங்கப்பதக்கம் வென்றார். கத்தாரின் பாசில் ரே (37) வெள்ளி வென்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ஆஷிமா (29) வெண்கலம் கைப்பற்றினார்.25 மீ., ஜூனியர் 'பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் பயல் காத்ரி (36நாம்யா கபூர் (30), தேஜஸ் வினி (27) என மூவரும் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர். 

யூத் பிரிவில் இந்தியா மொத்தம் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கம் வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News