25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் (03.07.2025) சென்னை அடையாறு சாஸ்திரி நகர், நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2.90 கோடி மதிப்பிலான நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தின் சேவைகளை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு வளாகம் மற்றும் சிவகாசி அம்மன்கோவில்பட்டி ஆகிய இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா ரூ.25 இலட்சம் மதிப்பிலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூர் ஆகிய இடங்களில் தேசிய நல வாழ்வு நிதி மூலமாக தலா ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என ஆக  மொத்தம் 4 இடங்களில் ரூ.2.90 கோடி மதிப்பிலான புதிய  கட்டிடங்கள்   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யசோதாமணி (விருதுநகர்), மரு.த.ஜெகவீரபாண்டியன் (எ) குணசேகரன் (சிவகாசி) உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News