25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விவசாயக் கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரமாகவும் சத்தூட்டி உரமாகவும் மாற்றிடலாம் என வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விவசாயக் கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரமாகவும் சத்தூட்டி உரமாகவும் மாற்றிடலாம் என வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில், தற்போது நெல், மக்காசோளம் மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்டவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெவ்வேறான பயிர்களிலிருந்து பெறப்படும் வைக்கோல், பயிர்களின் தாள்கள், கட்டைகள் மற்றும் இதர பிற கழிவுகள், நிலக்கடலை தொலி மற்றும் உமி தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு கதிர்மணிகள் எடுத்தபின் வரும் கழிவுகளை தான் நாம் பண்ணைக் கழிவுகள் என்று அழைக்கிறோம். அவற்றை எளிதாக தீ வைத்து சுற்றுப்புற சூழலை பாதிக்க விடும் நிலையில் அவற்றை மக்க வைத்து இயற்கை உரமாகவும் சத்தூட்டி உரமாகவும் மாற்றிடலாம்..

பண்ணைக் கழிவுகளை சேகரித்தல்

விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட பயிர் கழிவுகளை ஒரு சேர சேகரித்து அவற்றை பண்ணைகளில் ஏதாவது ஒரு பகுதியில் அதுவும் நீர் ஆதாரம், சாலை போக்குவரத்து உள்ள மேடான இடத்தில் சேகரித்த பண்ணை கழிவுகளை குவியலாக வைக்;க வேண்டும். கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிட வேண்டும். பெரிய பெரிய துண்டுகளாக கழிவுகள் இருந்தால் எளிதாக மக்கிட முடியாது. பசுமை நிற (பச்சை இலைகள்) இலைகளையும் காய்ந்து போன இலைகளையும் கலந்து ஒன்றுடன் ஒன்றாக சேர்க்க வேண்டும். கரிமசத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான் மக்கும் முறையை முடிவெடுக்கும். கரிம சத்து மற்றும் தழைச்சத்து விகிதத்தின் அளவு அதிகமாக இருந்தால் மக்குதல் நடைபெறாது. விகிதம் குறைவாக இருந்;தால் தான் எளிதாக மக்கும். மக்குவித்தலின் போது அதிகம் கரிமசத்து , தழைசத்து உள்ள பண்ணை கழிவுகளை மாற்றி அடுக்கி போடும் போது விரைவாக மக்கும்.

மக்குதல் குவியல் அமைத்தல்

குறைந்தது, 4அடி உயரத்திற்கு கழிவுகளை போட்டு அவற்றை குவியல் போட வேண்டும். மக்க வைக்கும் இடம் சிறிது உயரத்திலும் நல்ல நிழலில் இருக்க வேண்டும். ஒரு டன் பண்ணை கழிவுகளுக்கு 2 கிலோ வேஸ்ட்-டி-கம்போஸ்டர் /TNAU MICROBYOL CULTURE)  இதில் ஏதாவது ஒன்றை 20லிட்டர் நீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். இதனை குப்பை குவியல் மீது தெளிக்க வேண்டும்.

சுஞ்சாணக் கரைசல் நுண்ணுயிரிகளுக்கு நல்லதொரு ஆதாராமாகும். மேலேகண்ட கூட்டுக்கலவை கிடைக்காத போது பசுஞ்சாணக் கரைசலை தெளிக்கலாம். 40 கிலோ பசுஞ்சாணத்தை ஒரு டன் பண்ணைக் கழிவுகளுக்கு மக்குவதற்கு 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். கம்போஸ்ட்  படுக்கையில் காற்றோட்ட வசதி ஏற்படுத்திட வேண்டும். மக்கு உரம் தயாரிக்கும் போது 60மூ ஈரப்பதமாக இருக்க வேண்டும்.

மக்கிய உரத்தை எப்படி கண்டுபிடிப்பது ?

மக்கிய உரத்தின் வெளிப்படை தோற்றமானது அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும் ஒவ்வொரு துகள்களின் அளவும் குறைந்தும் காணப்படும். இவற்றை 4 மி.மீ சல்லடைக் கொண்டு சலித்து எடுக்க வேண்டும். மக்காத கழிவுகளை தனியாக சேகரித்து மறுபடியும் மக்கிட செய்ய வேண்டும்.

செறிவூட்;டப்பட்ட மக்கிய உரமாக மாற்றுவது எப்படி?

சலித்த உரத்துடன் நன்மை செய்யும் நுண்ணுயிர்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் போன்றவைகளை 2%  கலந்து அவற்றை 40%  ஈரப்பதத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்க 20 நாட்கள் அப்படியே வைத்திருந்தால் அது செறிவூட்டப்பட்ட உரமாகும். (ENRICHED MANURE)

மக்கி உரத்தை நிலத்தில் இடுவதால் என்ன பயன்கள்?

1) மக்கிய உரத்தை மண்ணில் கலப்பதால், மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை மேம்படுத்தி மண்ணின் கட்டமைப்பு மாறுகிறது.
2) தாவர கழிவுகள் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதால் விளைப்பொருட்களின் தரம் உயருகிறது.
3) குறைந்த செலவிலே தயாரிக்கப்படுவதால் சாகுபடிக்கான உரச்செலவு கணிசமாக குறையும்

எனவ, தற்போது அறுவடை காலம் என்பதால் பயிர் கழிவுகள் மற்றும் பண்ணை கழிவுகளை தீயிட்டு எரிக்கமால் எளிதாக மக்கிட வைத்து நிலத்தில் இடுவதால் சாகுபடியில் மகசூல் அதிகரிப்பதுடன் உரச்செலவும் கணிசமாக குறைவதுடன் மண்ணும் வளப்படுத்தப்படுகிறது என விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News