‘ஜீன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,1 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தினை, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் காடு மற்றும் மரங்களின் பரப்பை 2030-31 ஆம் ஆண்டிற்குள் அதன் புவியியல் பரப்பில் 23.8 சதவிதம் லிருந்து 33 சதவிதம் ஆக உயர்த்தும் நோக்கத்துடன் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பூர்வீக மரங்கள் நடப்பட வேண்டும். நகர்ப்புறங்கள், விவசாய நிலங்கள், கல்வி நிறுவனங்கள். பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்று, பல பங்குதாரர்களை உள்ளடக்கி மக்கள் இயக்கமாக மாறுவதை உறுதி செய்வதாகும்.
2030-2031 ஆம் ஆண்டிற்குள் காடு மற்றும் மரங்களின் பரப்பில் 50-60 மில்லியன் டன் கூடுதல் கார்பன் சிங்க்கை உருவாக்க மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அபாயங்களை விரைவாகக் கட்டுப்படுத்த அதிக மரங்களை நடுவது ஆகியன இத்திட்டத்தின் நன்மைகள் ஆகும்.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, 05.06.2025 அன்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, 11 வட்டாரங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 16.8 சதவிதம் இருக்கும் பசுமை பரப்பினை 33 சதவிதம் ஆக அதிகரிக்க மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஜீன்-5 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, ஜீன் மாதத்தில் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, துறைகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள அரசு அலுவலகங்க கட்டிடங்கள், பஞ்சாயத்து நிலங்கள் நகராட்சி பூங்காக்கள், அரசு மருத்துவமனைகள், விவசாய நிலங்கள், முதலிய பல்வேறு இடங்களில் அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.
இது போன்று தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
0
Leave a Reply