25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடும் நோக்கில்,  விதிமீறல்களில் ஈடுபடும் விற்பனை நிலையங்களுக்கு தடையின்மைச் சான்று மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடும் நோக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் விற்பனை நிலையங்களுக்கு தடையின்மைச் சான்று மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தகவல்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை வெடி விபத்தில்லா தீபாவளியாகக் கொண்டாடும் நோக்கிலும்,வெடிபொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு  வரும் தொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் விருதுநகர் மாவட்ட நிருவாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடிபொருள்கள் சில்லறை விற்பனை நிலைய உரிமதாரர்கள் அனைவரும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி செயல்பட்டு, மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், கடைகளின் முன்புறம் பாதுகாப்பு தூரத்திற்குள் ஆபத்தான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வெடிபொருள்களை வெடித்துக் காட்டக்கூடாது எனவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கடைகளின் முன்புறம் தற்காலிக கட்டுமானங்களை அமைக்கக்கூடாது எனவும்,மாவட்ட நிருவாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு வெடிபொருள்கள்  இருப்பு வைத்திருத்தல்,  உரிய தீயணைப்பு சாதனங்கள் இல்லாதிருத்தல், தடை செய்யப்பட்ட வெடிபொருள்களை விற்பனை செய்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் விதிமீறல்கள் ஆய்வின்போது கண்டறியப்படின், தொடர்புடைய வெடிபொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தடையின்மைச் சான்று மற்றும் உரிமம் நிரந்தரமாக இரத்து செய்யப்படுவதுடன், உரிமதாரர் மீதும் அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News