25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு சமைத்தலை பற்றிய செயல் விளக்க முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு சமைத்தலை பற்றிய செயல் விளக்க முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் கிராமத்தில் (20.08.2025) உணவு பாதுகாப்புத் துறையும், நியூ கான்செப்ட் இன்பர்மேஷன் பிரைவேட் லிட் என்ற தன்னார்வ நிறுவனமும் இணைந்து நடத்திய, “செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு சமைத்தலை பற்றிய செயல் விளக்க முகாமினை“ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களிருந்து உணவு சமைப்பதால், செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்தில் குறைபாடு ஏதும் ஏற்படாது. செறிவூட்டப்பட்ட அரிசியை கழுவும் போது மிதக்கும் வெள்ளை நிற அரிசியை நீக்கிவிட வேண்டாம். அதையும் சேர்த்தே சமைக்க வேண்டும். அந்த வெள்ளை நிற அரிசி தான் வைட்டமின்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் ஆகும்.மேலும், தமிழ்நாடு அரசு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பாமோலின் எண்ணெயும், இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட உப்பினையும் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.அதன்படி செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்தி சமையல் செய்வது குறித்த செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் பட்டம்புதூர் மற்றும் ஆர்.ஆர்.நகர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் எட்டூர் மற்றும் அப்பநாயக்கன்பட்டியில் 21.08.2025 அன்றும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தாயில்பட்டி மற்றும் ஆலங்குளத்தில் 22.08.2025 அன்றும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தளவாய்புரம் மற்றும் மம்சாபுரம் பகுதியில் 23.08.2025 அன்றும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் இராமகிருஷ்ணாபுரம் மற்றும் கிருஷ்ணன் கோயில் பகுதிகளில் 25.08.2025 அன்றும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி பகுதிகளில் 26.08.2025 அன்றும்,

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி மற்றும் எரிச்சநத்தம் பகுதிகளில் 28.08.2025 அன்றும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவநத்தம் மற்றும் பாளையம்பட்டி பகுதிகளில் 29.08.2025 அன்றும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் வக்கனாங்குண்டு மற்றும் கல்குறிச்சி பகுதிகளில் 30.08.2025 அன்றும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் கல்லூரணியில் 01.09.2025 அன்றும்,  நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வீரசோழன் பகுதியில் 01.09.2025 அன்றும் நடைபெற உள்ளது. எனவே அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள் குறித்த விளக்கக் கையேடு, சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு.தர்மர், திரு.ஜோதிபாஸ்  மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News