திருவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனக்கோட்டம் வனவியல் விரிவாக்க மையத்தில் (31.12.2025) தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் 2024-2025 கீழ், நாவல், வாகை, புங்கன், நீர் மருது, மந்தாரை, தான்றி, சீத்தா, அத்தி, புளி, மகிழம், ஆத்தி உள்ளிட்ட சுமார் 8000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சி மொட்டைமலை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக புதிதாக குடியிருப்பு வீடுகள் கட்டப்படவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில் வனத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply