மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47.38 இலட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் (08.03.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பிரதம மந்திரி திவ்ய கேந்திரா திட்டத்தின் மூலமாக Artificial Limbs Manufacturing Corportation of India (ALIMCO)/PMDK நிறுவனம் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47.38 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்கள்.
முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், Artificial Limbs Manufacturing Corportation of India (ALIMCO) நிறுவனம் சார்பில், (பேட்டரி மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ஊன்றுகோல், சிறப்பு நாற்காலி) என118 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.21,34,331/- மதிப்பிலும், TORCHIT நிறுவனம் மற்றும் ONGC நிறுவனம் மூலம் சமூக பங்களிப்பு நிதி (CSR Fund) திட்டத்தில் பார்வைத் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் மற்றும் ஸ்மார்ட் கேன் என 90 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பிலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் (ஸ்மார்ட் போன்) என 99 பயனாளிகளுக்கு ரூ.16,03,701/- மதிப்பிலும் என மொத்தம் 307 பயனாளிகளுக்கு ரூ.47.38 இலட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இவ்விழாவில் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply