தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பெரியவள்ளிக்குளம் கிராமத்தில், இயங்கி வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (01.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், நீதிமன்ற உத்தரவின்படியும், தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றனவா என்பது குறித்து குழு அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, பெரியவள்ளிக்குளம் கிராமத்தில், இயங்கி வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும், அரசின் உரிமம் பெற்றுள்ளதா என்பது குறித்தும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் (நிலத்தடி நீர், காரைக்குடி) திரு.கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply