விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர் வட்டாரப்பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (08.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் நகராட்சி ஆத்துப்பாலம் அருகில் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலைக்கோட்டம், விருதுநகர் மூலம் கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சியில் ஆவின் -க்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த நிலத்தினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அலுவலர்களிடம் கலந்துரையாடி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இரண்டு பயனாளிகளுக்கு புஞ்சை நில பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், 3 பயனாளிகளுக்கு வீட்டு வரி ரசீது நகலினையும், ஒரு பயனாளிக்கு மின்சார வாரியத்தில் பெயர் மாற்றம் செய்த நகலினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, விருதுநகர் நகராட்சி ஆணையாளர், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply