மிகப்பெரிய பர்மிய மலைப்பாம்பு
மலைப்பாம்புகள் மிகப்பெரிய உயிரினங்களைக் கூட அப்படியே விழுங்கி விடும் என்பதை நாம் அறிவோம். பர்மிய மலைப்பாம்பு ஒன்று சமீபத்தில் 54 கிலோ எடை உள்ள ஒரு மானை விழுங்குவது வீடியோவாகப் பதிவாகியுள்ளது. இவ்வளவு பெரிய விலங்கையும் கூட மலைப்பாம்பினால் விழுங்க முடியும் என்பது இப்போது தான் தெரியவந்துள்ளது.
நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரங்களுள் ஒன்று பர்னார்ட்ஸ் நட்சத்திரம். சிவப்பு குள்ள நட்சத்திரமான இதை ஒரு கோள் சுற்றி வருவதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது நமது வெள்ளிக் கோளில் பாதி நிறையை உடையது.
இஸ்ரேல் நாட்டு பாலைவனத்தில் 1980களில் ஒரு விதையை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 2010ம் ஆண்டிலிருந்து அதை வளர்க்க முயன்றனர். ஆயிரமாண்டுகள் பழைய இந்த விதை தற்போது முளைத்துச் செடியாக வளர்ந்துள்ளது.
0
Leave a Reply