25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சிதம்பராபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 298  பயனாளிகளுக்கு  அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிதம்பராபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 298 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சிதம்பராபுரம் கிராமத்தில்  (09.07.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் 298  பயனாளிகளுக்கு ரூ.27.63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 53 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.22,68,133/- மதிப்பிலும், 7 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல்களும், 27 பயனாளிகளுக்கு புஞ்சை மற்றும் நஞ்சை பட்டா (முழுப்புலம்/உட்பிரிவு) மாறுதல்களும், 16 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களும், 38 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 37 பயனாளிகளுக்கு  சமூக பாதுகாப்பு திட்ட உழவர் அட்டைகளையும், 105 பயனாளிகளுக்கு நத்தம் நிலவரித்திட்ட தூய சிட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.38,680/-மதிப்பில் சொட்டுநீர்ப்பாசன மானியம், பழச்செடி, காய்கறி விதை தொகுப்புகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.4,50,000/- மதிப்பிலும் என மொத்தம் 298 பயனாளிகளுக்கு ரூ.27.63 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது.இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு அரசுத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் நான்கு அல்லது ஐந்து கிராமங்களை இணைத்து ஒரு இடத்தில் 15.07.2025 முதல் 07.11.2025 வரை முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்பாக அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீடுகளாக சென்று மனுக்களை பெற்று வருகின்றனர். மக்கள் வழங்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து, உரிய  தீர்வுகள் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணத்திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட தகுதியானவர்கள், முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், விவசாயம் சார்ந்த குறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மனுக்கள் வழங்கும் பட்சத்தில்,  அரசிற்கு நேரடியாக சென்று இந்த பணிகள் அனைத்தும் விரைவாக செய்து முடிக்கப்படும்.

இதுபோன்று அரசினுடைய பல்வேறு திட்டங்களில் செயல்படக்கூடியனவற்றை எல்லாம் நீங்கள் பெற்று கொள்ள வேண்டும். இதன் மூலமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தான் அரசு இத்தகைய திட்டங்களை எல்லாம் தீட்டி, நேரடியாக உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News