ஒடிசா ஹாக்கி அணி கோப்பை வென்றது.
ராஞ்சியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் பைனலில் சூர்மா ஹாக்கி கிளப் (பஞ்சாப், ஹரி யானா), ஒடிசா வாரியர்ஸ் அணிகள் மோதின. ஒடிசா அணியின் ருதுஜா(20வது நிமிடம்), ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு சூர்மா அணிக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் பென்னி ஸ்குவிப்(28) ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார்.ஒடிசா அணிக்கு ருதுஜா(56) மீண்டும் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
0
Leave a Reply